வடக்கு கிழக்கில் முன்னெடுக்கப்பட்ட ஹர்த்தால் வெற்றி: சுரேஸ் பிறேமச்சந்திரன்

வடக்கு கிழக்கில் முன்னெடுக்கப்பட்ட கடையடைப்பு மற்றும் ஹர்த்தாலை மக்கள் வெற்றி பெறச்செய்துள்ளனர் எனவும் ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் இந்த போராட்டத்தை கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும் எனவும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிறேமச்சந்திரன் கோரிக்கை விடுத்துள்ளார்.

தமிழர் தாயக பகுதிகளில் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து முன்னெடுக்கப்பட்ட கடையடைப்பு,ஹர்த்தால் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இன்று முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தை சர்வதேச சமூகம் கவனத்தில் எடுக்க வேண்டும் எனவும் இடம்பெயர்ந்து வாழும் மக்கள் உடனடியாக மீளக் குடியேற்றப்பட வேண்டும் காணமல் போனவர்களின் குடும்பங்களுக்கு சரியான பதில் சொல்லப்பட வேண்டும் என்றும் சுட்டிக்காட்டினார்.

இந்த பிரச்சினைகளுக்கு அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்காவிட்டால் போராட்டங்கள் இன்னும் விஸ்தரிக்கப்பட்டு மோசமான நிலையை ஏற்படுத்தும் எனவும் குறிப்பிட்டார்.

Related Posts