யாழ் தேவியில் மோதி ஒருவர் பலி

யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த யாழ் தேவி ரயிலுடன் மோதுண்டு குடும்பஸ்தர் ஒருவர், சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார் என்று, வவுனியா பொலிஸார் தெரிவித்தனர்.

வவுனியா, நொச்சி மோட்டைப் பகுதியிலுள்ள புகையிரதக் கடவையின் ஊடாக, பண்டாரிக்குளம் வீதியை மோட்டார் சைக்கிளில் கடக்க முயன்றபோதே, அவர் விபத்துக்குள்ளாகியுள்ளார்.

வவுனியா நகரசபை விடுதியில் வசிக்கும் நவலிங்கம் ஜீவராஜ் (வயது 43) என்ற மூன்று பிள்ளைகளின் தந்தையே உயிரிழந்துள்ளார் என்று தெரிவித்த வவுனியா பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Posts