Ad Widget

தமக்கு எதிராக போராடும் மக்களுடன் புத்தாண்டை கொண்டாடிய இராணுவத்தினர்!

முல்லைத்தீவில் கேப்பாபுலவு இராணுவத் தலைமையகம் முன்பாக தமது பூர்வீகக் காணிகளை மீட்கப் போராடும் மக்களுடன் இராணுவத்தினர் புத்தாண்டை கொண்டாடியுள்ளனர். இம் மக்கள் கடந்த மாதம் முதலாம் திகதி ஆரம்பித்த போராட்டத்தை 56ஆவது நாளாகவும் இன்றும் தொடர்கின்றனர்.


இந்த நிலையில் இராணுவத் தலைமையகம் முன்பாக கூடாரம் அமைத்து போராட்டத்தில் ஈடுபடும் மக்களை இராணுவத்தினர் சென்று சந்தித்து புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளதுடன் பண்டிகைத் திண்பண்டங்களையும் மக்களுடன் பரிமாறியுள்ளனர்.

எனினும் தாம் புத்தாண்டை கொண்டாடும் நிலையில் இல்லை எனத் தெரிவித்த கேப்பாபுலவு மக்கள் தமது சொந்த இடங்களுக்குச் செல்லும் நாளுக்காக தாம் காத்திருப்பதாகவும் தமது காணிகளை விட்டு வெளியேறி தம்மை தமது சொந்த நிலத்தில் வாழ விடுமாறும் இராணுவத்திடம் கேட்டுக்கொண்டனர்.

Related Posts