வடக்கு கிழக்கு சுகாதார அபிவிருத்தித் திட்டத்துக்கு 200 மில்லியன் ரூபா: லைக்கா

இலங்கையின் வடக்கு கிழக்கில், 200 மில்லியன் ரூபா பெறுமதியான பாரிய சுகாதார அபிவிருத்தித் திட்டத்தை மேற்கொள்ளத் தயார் என லைக்கா ஞானம் அறக்கட்டளையின் இணைத் தலைவர்களில் ஒருவரும், லைக்கா குழுமத்தின் தலைவருமான அல்லிராஜா சுபாஸ்கரன் தெரிவித்துள்ளார்.

இந்தத் திட்டத்திற்கு இலங்கை அரசாங்கம் அனுமதியினையும் ஒத்துழைப்பையும் வழங்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

வவுனியா பூந்தோட்டம் நலன்புரி முகாமில் கடந்த 25 ஆண்டு காலமாக அடிப்படை வசதிகளற்ற நிலையில் பல்வேறு இன்னல்களுக்கு மத்தியில் வாழ்ந்து வந்த மக்களின் வீட்டுத் தேவையினை லைக்காவின் ஞானம் அறக்கட்டளையின் ஊடாக பூர்த்தி செய்து வைத்த சந்தர்ப்பத்தில், தமது புதிய விருப்பத்தினை இவ்வாறு வெளிப்படுத்தியுள்ளார்.

அத்துடன், 150 என்று அல்லாமல் பாதிக்கப்பட்ட மக்களுக்காக 600 வீடுகளை அமைக்கும் தமது திட்டம் வெற்றியளிக்கும் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்

சுமார் 23 கோடி ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள, 150 வீடுகளைக் கொண்ட லைக்கா கிராமத்தை, பயனாளிகளுக்கு கையளிக்கும் நிகழ்வு, நேற்று வவுனியா சின்னடம்பன் பகுதியில் இடம்பெற்றது

Related Posts