வேலையற்ற பட்டதாரிகள் இன்று ஆர்ப்பாட்டப் பேரணிக்கு ஏற்பாடு!

வடக்கு மாகாண வேலையற்ற பட்டதாரிகள் சமூகத்தின் ஏற்பாட்டில் கவனயீர்ப்புப் பேரணி ஒன்று இன்று புதன்கிழமை யாழ்ப்பாணத்தில் நடாத்தப்படவுள்ளது.

வடக்கு மாகா­ணத்­தைச் சேர்ந்த அனைத்­துப் பட்­ட­தா­ரி­க­ளை­யும் ஒன்­றி­ணைத்து இன்று முற்­ப­கல் 9.30 மணி­ய­ள­வில் யாழ்ப்­பாண பல்­க­லைக்­க­ழ­கத்­தி­லி­ருந்து ஆரம்­ப­மா­கும் பேரணி, யாழ்.நகர் நோக்­கிச் சென்று அங்­கி­ருந்து கண்டி வீதி வழி­யாக யாழ்ப்­பாண மாவட்­டச் செய­ல­கத்தை அடை­யும் என்றும், வடக்கு மாகாண வேலையற்ற பட்­ட­தா­ரி­க­ளின் பிரச்­சி­னை­கள் தொடர்­பா­க­வும் தொண்­டர் ஆசி­ரி­யர் நிய­ம­னத்­தில் உள்ள பிரச்­சி­னை­கள் தொடர்­பா­க­வும் உட­ன­டி­யா­கத் தீர்­வு­கள வழங்­க­வேண்­டும் என வலி­யு­றுத்­தி யாழ்ப்­பாண மாவட்­டச் செய­ல­ரி­டம் மனு ஒன்­றும் கைய­ளிக்­கப்­ப­டும் என்றும் ஏற்பாட்டாளர்களினால் அனுப்பி வைக்கப்பட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts