Ad Widget

விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனைச் சுடுமாறு ராஜீவ்காந்தி உத்தரவிட்டார்!

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் மீது நம்பிக்கையிழந்த மறைந்த முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ்காந்தி அவரைச் சுட்டுக்கொல்லுமாறு இந்திய இராணுவத்தினருக்கு கட்டளை பிறப்பித்ததாக கருணா என அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளீதரன் தெரிவித்துள்ளார்.

பத்திரிகையொன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில்,

விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் இந்தியாவுக்குச் சென்று தாக்குதலில் ஈடுபடுவதில்லையென சமாதான ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திட்டிருந்தார். எனினும் குறித்த ஒப்பந்தத்தினை மீறி சீனன்குடாவில் காவல்துறையின் காவல்நிலையம் மீதும், சிங்கள, முஸ்லிம் மக்கள் மீதும் தாக்குதல் நடாத்தினார்.

இவ்வாறான தாக்குதல்கள் காரணமாக தான் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் மீது நம்பிக்கையிழந்துவிட்டதாகவும், அக்காலப்பகுதியில் இந்தியத் தூதுவராகக் கடமையாற்றிய டிக்சிற் இற்கு இந்திய இராணுவத்தின் கட்டளையதிகாரியாகக் கடமையாற்றியவருக்கு பிரபாகரனைச் சுட்டுக்கொல்லுமாறு இரகசியமாக கட்டளைபிறப்பிக்குமாறும் பணிப்புரை விடுத்தார்.

இந்நிலையில், மேஜர் ஜெனரல் கிரான் கிங் இந்திய படையினர் ஒருபோதும் பின்னால் சுட மாட்டார்கள் என ராஜீவின் உத்தரவினை ஏற்க மறுத்ததினால் பிரபாகரனை கொலை செய்யுமாறு ராஜீவ் காந்தி பிறப்பித்த உத்தரவு அன்று அமுல்படுத்தப்படவில்லை என விநாயகமூர்த்தி முரளீதரன் மேலும் தெரிவித்துள்ளார்.

Related Posts