வவுனியா வேலையற்ற பட்டதாரிகளை பதிவு செய்யும் நடவடிக்கை ஆரம்பம்

வவுனியா மாவட்ட அரச வேலையற்ற பட்டதாரிகளை பதிவு செய்யும் நடவடிக்கைகள் நேற்று முன்தினம் தொடக்கம் வவுனியா மாவட்ட செயலகத்தில் அமைந்துள்ள பொதுமக்கள் தொழில் சேவை மத்திய நிலையத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக வட மாகாண வேலையற்ற பட்டதாரிகள் சமூகத்தின் வவுனியா மாவட்ட பிரதி நிதி தெரிவித்துள்ளார்.

இப்பதிவானது தினமும் காலை 9 மணி தொடக்கம் மாலை 4.30 மணி வரை நடைபெறுவதுடன் இப்பதிவு நடவடிக்கைகளின் இறுதித்தினமாக எதிர்வரும் 24ஆம் திகதி வெள்ளிக்கிழமை அறிவிக்கப்பட்டுள்ளது.

எனவே இது வரை பதிவுகளை மேற்கொள்ளாத வேலையற்றபட்ட தாரிகள் குறித்த பதிவு நடவடிக்கையில் இணைந்து கொள்ளுமாறும் ஏனைய பதியாமல் உள்ள சக வேலையற்ற பட்டதாரிகளுக்கும் இவ் விடயத்தை அறிவிக்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

தற்போது வரை 91 பட்டதாரிகளே பதிந்துள்ள நிலையில் அவசரமாக வவுனியா மாவட்ட ஏனைய வேலையற்ற பட்டதாரிகள் அனைவரும் உடனடியாக கிராம சேவையாளரிடம் உறுதிப்படுத்தப்பட்ட ஆவணத்துடன் (வேலையற்ற நிலை தொடர்பாக) வருகை தந்து பதிவு செய்யுமாறு அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இப்பதிவு நட வடிக்கையானது வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் சமூகத்தின் வவுனியா மாவட்ட பிரதிநிதி மற்றும் வவுனியா மாவட்ட செயலாளர் ஆகியோருக்கு இடையில் நடைபெற்ற ஆக்கபூர்வமான கலந்துரையாடலின் பிரதிபலனாக நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts