மட்டக்களப்பில் வேலையற்ற பட்டதாரிகள் மௌனப் போராட்டத்தில் ஈடுபட்டனர்

மட்டக்களப்பில் வேலையற்ற பட்டதாரிகள் தமது வாய்களை கறுப்புத் துணியால் கட்டியவாறு பாரிய மௌனப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மட்டக்களப்பு நகரில் அரச நியமனம் வழங்குமாறு கோரி வேலையற்ற பட்டதாரிகள் நடாத்திவரும் சத்தியாக்கிரகப் போராட்டம் நேற்று 21 ஆவது நாளாகத் தொடரும் நிலையில் நேற்று (திங்கட்கிழமை) அவர்கள் மௌனப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஒடுக்கப்பட்ட எமது தொழிலுரிமை எனும் தலைப்பில் உருவமொன்றைச் சுமந்துவாறு பெருமளவிலான பட்டதாரிகள் மட்டக்களப்பு மணிக்கூட்டுக் கோபுரத்தில் இருந்து பேரணியை ஆரம்பித்து பிரதான வீதிகளுக்கூடாகச் சென்று மீண்டும் சத்தியாக்கிரம் நடைபெறும் இடத்தை அடைந்தனர்.

அண்மையில் பட்டதாரிகள் நால்வருக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்ததை அடுத்து இன்றைய தினம் மெளனமான முறையில் இந்த கவனயீர்ப்பு பேரணியை நடத்தியமை குறிப்பிடத்தக்கது.

Related Posts