இந்திய மீனவர்களின் குற்றச்சாட்டுக்கள் ஆதாரமற்றவை: கடற்படைத் தளபதி

கடற்படையின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி இந்திய மீனவர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக கூறப்படும் குற்றச்சாட்டுக்கள் ஆதாரமற்றவை என கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவிந்திர விஜேகுணவர்தன தெரிவித்தார்.

நேற்றையதினம் கச்சதீவில் செய்தியாளர்களிடம் கருத்துத் தெரிவித்தபோதே மேற்படி குறிப்பிட்டுள்ளார்.

மேலும் கடலில் ரோந்து செல்லும் கடற்படையினர் துப்பாக்கியைப் பயன்படுத்துவதாயின் அதற்காக கடற்படைத் தலைமையிடம் அனுமதி கோரப்பட வேண்டும். அவ்வாறான எந்த அனுமதியும் கோரப்பட வில்லை. இவ்வாறிருக்கையில் கடற்படையினரின் துப்பாக்கிப் பிரயோகத்துக்கு இலக்காகி கொல்லப்பட்டதாக கூறுவது ஆதாரமற்றது என அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் இது தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், இது குறித்த முழுமையான அறிக்கை விரைவில் ஜனாதிபதியிடம் கையளிக்கப்படுமெனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் இலங்கைக் கடற்படையினரின் துப்பாக்கிச் சூட்டிலேயே இந்திய மீனவர் கொல்லப்பட்டதாக தெரிவித்து பல போராட்டங்களை முன்னெடுத்து வருவதுடன், நேற்றையதினம் இடம்பெற்ற கச்சதீவு திருவிழாவினையும் இந்திய பக்தர்கள் புறக்கணித்திருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

Related Posts