தென்மராட்சியில் டெங்குத் தொற்றுக்குள்ளாவோரின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது என்று சாவகச்சேரி சுகாதாரப் பிரிவினர் தெரிவித்தனர்.
அண்மைக்காலமாக காய்ச்சலால் பீடிக்கப்பட்டு சிகிச்சைக்காக வைத்தியசாலை வருவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
கடந்த 9 நாள்களில் மட்டும் டெங்குத் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 100ஐத் தாண்டியிருந்தது. அதையடுத்து சுகாதாரப் பிரிவினரால் டெங்குக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
இந்த டெங்கு பரிசோதனையின் போது நுளம்பு பெருகுவதற்கு ஏதுவான வகையில் வீட்டுச் சூழல் மற்றும் சுற்றுப்புறச் சூழலை வைத்திருப்பவர்களின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதார பிரிவினர் தெரிவித்தனர்.