வடக்கில் முதன்முதலாக சாரதி நடத்துனர் சங்கம்

வவுனியா தனியார் பஸ்களில் பணியாற்றும் சாரதி, நடத்துனர்களை உள்ளடக்கிய சங்கமொன்று அங்குரார்ப்பணம் செய்யப்பட்டுள்ளது.

வவுனியா தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்தின் கீழ் செயற்படும் வகையில் இந்த சங்கமானது வட மாகாணத்தில் முதன்முதலாக நேற்று உருவாக்கப்பட்டுள்ளது.

தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்தின் வவுனியா மாவட்ட தலைவர் எஸ். ரி.இராஜேஸ்வரன் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் குறித்த சங்கத்துக்கான புதிய நிர்வாகிகளும் தெரிவு செய்யப்பட்டிருந்தனர்.

இதற்மைய வவுனியா தனியார் பஸ் சாரதி நடத்துனர் சங்கத்தின் தலைவராக செல்வரட்னம் தவேந்திரனும், செயலாளராக எம். மயூரனும் பொருளாளராக தெய்வேந்திரன் ஜெகதீஸ்வரனும், உப தலைவராக கந்தசாமி நிரஞ்சன், உப செயலாளராக அமிர்தலிங்கம் சுதர்சன் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

நிர்வாக உறுப்பினர்களாக எவ்.என்.கசன், புஸ்பராஜா சிவானந்தன், டபிள்யு. ஏ.காமினி, ஏ.எம். இர்சாட் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டதுடன், ஆலோசகராக சிவலோக மூர்த்தியும் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

Related Posts