பட்டதாரிகள் பிரச்சினைக்கு இந்த மாத இறுதிக்குள் தீர்வு

வடக்­கில் யாழ்ப்­பா­ணம் தொடங்கி கிழக்­கில் திரு­கோ­ண­மலை வரை விரி­வ­டைந்­துள்ள பட்­ட­தா­ரி­க­ளின் போராட்­டம் தொடர்­பாக ஸ்ரீலங்கா சுதந்­தி­ரப் பட்­ட­தா­ரி­கள் சங்­கத்­தின் யாழ் மாவட்ட இணைப்­பா­ள­ரும், நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான அங்­க­ஜன் அறிக்கை ஒன்றை வெளி­யிட்­டுள்­ளார்.

அந்த அறிக்­கை­யி­லேயே அவா் தெரி­வித்­துள்­ள­தா­வது,

இன்று யாழ்ப்­பா­ணத்­தில் பட்­ட­தா­ரி­க­ளால் சுழற்­சி­ மு­றைப் போராட்­டம் ஆரம்­பிக்­கப்­பட்டு நடை­பெ­று­கின்­றது .இது கிழக்­கி­லும் விரி­வு­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது.

பட்­ட­தா­ரி­க­ளி­னால் முன்­னெ­டுக்­கப்­ப­டும் இந்­தப் போராட்­டம் குறித்து அரச தலை­வ­ருக்­குத் தெரி­யப்­ப­டுத்­தி­யுள்­ளேன்.

இதன் அடிப்­ப­டை­யில் அரச தலை­வா் நாட­ளா­விய ரீதி­யான பட்­ட­தா­ரி­களை பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்­தும் முக்­கிய உறுப்­பி­னர்­களை இந்த மாதம் சந்­தித்து உரிய நட­வ­டிக்கை எடுப்­ப­தா­கக் கூறிக் கலந்­து­ரை­யா­ட­லுக்­கான திக­தி­யை­யும் அவர் கொடுத்­துள்­ளார்.

இந்த மாதம் நடை­பெ­றும் ஸ்ரீலங்கா சுதந்­தி­ரப் பட்­ட­தா­ரி­கள் சங்­கத்­தின் அமர்­வில் இதற்கு ஒரு நிரந்­த­ரத் தீர்வு எட்­டப்­ப­டும்-­ என்­றார்.

Related Posts