வடக்கில் 6124 ஏக்கர் காணியை உட­ன­டி­யாக விடு­வி­க்க வேண்டும்! ஐ.நா

வடக்கில் படை­யினர் வசம் காணப்­ப­டு­கின்ற பொது­மக்­களின் 6124 ஏக்கர் காணிகள் உட­ன­டி­யாக முதன்மை அடிப்­ப­டையில் விடு­விக்­கப்­பட வேண்டும். மேலும் கரை­யோரப் பிர­தே­சங்­களில் அப­க­ரிக்­கப்­பட்­டுள்ள மக்­களின் காணி­களும் விடு­விக்­கப்­பட வேண்டும். அத்­துடன் வடக்­கி­லி­ருந்து இரா­ணுவம் அகற்­றப்­ப­டு­வதும் முக்­கி­ய­மா­ன­தாகும் என்று இலங்­கைக்கு விஜயம் மேற்­கொண்­டி­ருந்த சிறு­பான்மை மக்கள் தொடர்­பான விவ­கா­ரங்­களை ஆராயும் ஐக்­கிய நாடு­களின் விசேட நிபுணர் றீட்டா ஐசாக் நாடியா பரிந்­துரை செய்­தி­ருக்­கிறார்.

கடந்த ஒக்­டோபர் இலங்­கைக்கு விஜயம் மேற்­கொண்ட சிறு­பான்மை மக்கள் தொடர்­பான விவ­கா­ரங்­களை ஆராயும் ஐக்­கிய நாடு­களின் விசேட நிபுணர் றீட்டா ஐசாக் நாடியா ஐக்­கிய நாடுகள் மனித உரிமைப் பேர­வைக்கு சமர்ப்­பித்­துள்ள தனது விப­ர­மான அறிக்­கை­யி­லேயே இந்தப் பரிந்­து­ரைகள் முன்­வைக்­கப்­பட்­டுள்­ளன.

அர­சாங்கம் முன்­னு­ரிமை நட­வ­டிக்­கை­யாக வடக்கில் படை­யினர் வசம் காணப்­ப­டு­கின்ற பொது­மக்­களின் 6124 ஏக்கர் காணிகள் உட­ன­டி­யாக முதன்மை அடிப்­ப­டையில் விடு­விக்­கப்­பட வேண்டும். கரை­யோரப் பிர­தே­சங்­களில் அப­க­ரிக்­கப்­பட்­டுள்ள மக்­களின் காணி­களும் விடு­விக்­கப்­பட வேண்டும். தற்­போது இரா­ணு­வத்­தி­னரால் கைய­கப்­ப­டுத்­தப்­பட்­டுள்ள காணிகள் தொடர்­பாக ஒரு முறை­யான திட்­ட­மொன்று முன்­னெ­டுக்­கப்­பட வேண்டும்.

இரா­ணுவத் தேவை­க­ளுக்­காக பயன்­ப­டுத்­து­வதை நியா­யப்­ப­டுத்த முடி­யாத காணி­களை அதன் உரி­மை­யா­ளர்­க­ளுக்கு வழங்க வேண்டும். எந்­த­வி­த­மான முறை­யான செயற்­பாடும் இன்­றியும் நட்­ட­ஈடு இன்­றியும் அப­க­ரிக்­கப்­பட்ட காணிகள் மீள் வழங்­கப்­பட வேண்டும் அல்­லது நட்­ட­ஈடு வழங்­கப்­பட வேண்டும். மேலும் வடக்கு, கிழக்கு மாகா­ணங்­க­ளி­லி­ருந்து இரா­ணுவம் அகற்­றப்­ப­டு­கின்­ற­மை­யா­னது மக்­களின் அன்­றாட வாழ்க்­கைக்கு முக்­கி­ய­மா­னது மட்­டு­மன்றி ஒரு அடை­யா­ளத்­துக்­கா­கவும் செய்­யப்­பட வேண்டும்.

அத்­துடன் பயங்­க­ர­வாத தடைச்­சட்டம் நீக்­கப்­பட வேண்டும். அதற்குப் பதி­லாக முன்­வைக்­கப்­படும் சட்டம் சர்­வ­தேச தரங்­களைப் பின்­பற்ற வேண்டும். சிறு­பான்மை மக்கள் தொடர்­பான நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்ள அர­சியல் அமைப்­புக்­குட்­பட்ட விசேட ஆணைக்­குழு ஒன்றும் உரு­வாக்­கப்­ப­டு­வதும் அவ­சி­ய­மாகும் எனவும் ஐ.நா. விசேட நிபுணர் பரிந்­துரை செய்­தி­ருக்­கிறார்.

தேசிய நல்­லாட்சி அர­சாங்கம் தேசிய நல்­லி­ணக்­கத்­துக்­கா­கவும் அர­சி­ய­ல­மைப்பு மறு­சீ­ர­மைப்­புக்­கா­கவும் பல வேலைத் திட்­டங்­களை முன்­னெ­டுத்து வரு­கி­றது. ஆனால் அர­சாங்­கத்­துக்கும் நாட்டின் சமூ­கங்­க­ளுக்கும் இடை­யி­லான நம்­பிக்கை கட்­டி­யெ­ழுப்­பப்­பட வேண்­டிய தேவை காணப்­ப­டு­கி­றது. அத்­துடன் குற்­ற­வா­ளிகள் தண்­டிக்­கப்­ப­டாத நிலைமை ஆரா­யப்­ப­டாமல் உள்­ளது. இது தொடர்பில் கவனம் செலுத்­தப்­பட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

Related Posts