மனித உரிமைகள் பேரவையில் எதிர்வரும் மார்ச் மாதம் இலங்கை அரசாங்கம் கோரவுள்ள காலநீட்டிப்பிற்கு தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு ஆதரவளிப்பது தமிழ்மக்களுக்கு செய்யும் துரோகம் என தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் தெரிவித்தார்.
‘தற்போதைய அரசாங்கத்திற்கு எந்தவிதமான நெருக்கடிகளையும் கொடுக்காது தொடர்ந்தும் அரசாங்கத்தினைப் பாதுகாப்பதை விடுத்து ஓர் முழுமையான சர்வதேச விசாரணையை வலியுறுத்துவதுடன் காலநீடிப்பு வழங்குவதை முழுமையாக எதிர்க்க வேண்டும். இதற்கு வட.கிழக்கில் உள்ள அனைத்து சிவில் சமூகங்களும் இணைந்து குரல்கொடுக்கவேண்டும்’ என யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின்போது தெரிவித்திருந்தார்.
மேலும் இக்கால நீடிப்பென்பது அடுத்துவரப்போகும் தேர்தல்களில் தமது ஆட்சியைப் பாதுகாப்பதற்காகும். சர்வதேசப் பங்களிப்பற்ற உள்ளகப் பொறிமுறையினைத் தொடர்ந்தும் கூட்டமைப்பு ஆதரவளிக்குமானால் இது தமிழர்களுக்குச் செய்யும் துரோகமாகும் எனவும் கூறியிருந்தார்.