சர்வதேச நீதிபதிகளின் பங்களிப்பு அவசியம் : மனித உரிமை கண்காணிப்பகம்

யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பிலான விசாரணைகளுக்கு சர்வதேச நீதிபதிகளின் மற்றும் வழக்குரைஞர்களின் பங்களிப்பு மிகவும் அவசியமானது என மனத உரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.

குற்றச் செயல்களுக்கு பொறுப்பு கூறல் விடயத்தை உரிய முறையில் அமுல்படுத்துவதற்கு சர்வதேச நீதிபதிகளின் பங்களிப்பு அவசியமானது என மனித உரிமை கண்காணிப்பகத்தின் அவுஸ்திரேலிய பணிப்பாளர் எலைனி பியர்சன்ஸ் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் இன்னமும் இயல்பு நிலைமை முழுமையாக ஏற்படவில்லை என்பதே தமது நிலைப்பாடு என அவர் குறிப்பிட்டுள்ளார்.

புகலிடக் கோரிக்கையாளர்களை நாடு திரும்புமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்க கோரியிருந்த நிலையில் இந்த கருத்து வெளியிடப்பட்டுள்ளது.

Related Posts