மக்களின் காணிகளை சுவீகரிக்க முயற்சித்தால் போராட்டம் வெடிக்கும்: கஜேந்திரகுமார்

ஆரம்பத்தில் இருந்த விமான நிலைய எல்லையை தாண்டி, அரசாங்கம் கூறுவதை போன்று ஒரு ஏக்கர் நிலத்தையேனும் மேலதிகமாக சுவீகரிக்க நாம் இடமளிக்க மாட்டோம் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

யாழில் நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர்,

பலாலி விமான நிலையம் வேறு எவரது கைகளுக்கும் செல்வதை நாம் ஒருபோதும் அனுமதிக்கப் போவதில்லை எனவும் எம்மக்களை பாதிக்கும் வகையிலான எவ்வித திட்டங்களையும் யாராலும் முன்னெடுக்க முடியாது.

ஆரம்பத்தில் இருந்த விமான நிலைய எல்லையை தாண்டி, அரசாங்கம் கூறுவதை போன்று ஒரு ஏக்கர் நிலத்தையேனும் எடுக்க நாம் இடமளிக்க மாட்டோம். அதில் எவ்வித மாற்று கருத்தும் இல்லை.

அவ்வாறு மேலதிக காணிகளை சுவீகரிக்க அரசாங்கம் முயற்சித்தால் அதற்கு எதிராக போராட்டங்கள் முன்னெடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்தார்.

Related Posts