முன்னாள் பெண் புலி உறுப்பினருக்கு படையினரால் கணிணி வழங்கி வைப்பு

புனர்வாழ்வு அளிக்கப்பட்ட பின் சமூகத்துடன் இணைந்துள்ள முன்னாள் பெண் புலி உறுப்பினருக்கு இராணுவத்தின் மகளீர் படையனியால் கணிணி தொகுதி ஒன்று வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

யாழ். மாவட்ட கட்டளைத்தளபதி மகேஸ் சேனாநாயக்கவின் பணிப்புரைக்கு அமைய மயிலிட்டியில் அமைந்துள்ள 7வது மகளீர் படையணியின் கட்டளை அதிகாரி மேஜர் கீதிகா ரங்கோட்டே இப்பொருட்களை வழங்கி வைத்தார்.

புனர்வாழ்வு பெற்று சமூகத்துடன் இணைக்கப்பட்ட மேற்படி பெண் தமது வாழ்வாதரத்திற்காக வீட்டுடன் இணைந்து சிறு கடை ஒன்றினை நடத்தி வருவதுடன் பகுதி நேரமாக ஊடகப்பணியில் ஈடுபட்டு வருகின்றார்.

கவிதைகள், கட்டுரைகள், சமகால அரசியல் போன்ற விடயங்கள் வெளிநாட்டு ஊடகங்களுக்கு எழுதி வருவதனை கருத்திற்கொண்ட படையினர் இணையத்தள வசதியுடன் கூடிய கணணி தொகுதியினை அன்பளிப்பாக வழங்கி வைத்தனர்.

Related Posts