நாட்டில் மீண்டும் நிலவும் குளிர் காலநிலை எதிர்வரும் சில தினங்களுக்கு தொடர்ந்து நிலவக்கூடும் என எதிர்ப்பார்ப்பதாக காலநிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.
காற்று படிவங்களில் ஏற்பட்டுள்ள மாற்றம் இந்த குளிர் காலநிலைக்கு காரணமாகியுள்ளதாக அதன் பிரதி பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும் எதிர்வரும் 13ம் திகதியின் பின்னர் நாட்டின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மழை பெய்யக்கூடும் என அவர் மேலும் தெரிவித்தார்.