யாழ். இந்திய துணைத்தூதரகத்தில் வாள்வெட்டு குழு அட்டகாசம்

யாழ். மருதடி வீதியில் உள்ள இந்திய துணைத்தூதரகத்தின் பெயர்ப்பலகை சேதமாக்கப்பட்டுள்ளதுடன், அருகில் இருந்த கடைகளின் கதவுகள் வாளால் வெட்டி சேதமாக்கப்பட்டுள்ளன.

நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில், யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில கடை உரிமையாளர்கள் முறைப்பாடு செய்துள்ளனர்.

வாள்வெட்டுக்குழுக்கள் தொடர்பாக அண்மைய காலமாக பல்வேறு தகவல்கள் வெளியாகிவரும் நிலையில் இடம்பெற்றுள்ள இச் சம்பவத்தால், பிரதேசத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

சம்பவம் தொடர்பான விசாரணைகளை யாழ். பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

Related Posts