வடமாகாணத்தில் மானாவாரி மற்றும் பெரிய, சிறிய குளங்களை நம்பி மேற்கொள்ளப்பட்ட பெரும்போக நெற்செய்கையில், சுமார் 28 ஆயிரத்து 802.5 ஏக்கர் நெற்செய்கை 100 வீதம் அழிவடைந்துள்ளது. யாழ்ப்பாணம், மன்னார் ஆகிய இரு மாவட்டங்களிலும் 21 ஆயிரத்து 170 ஏக்கர் நிலத்தில் செய்யப்பட்ட நெற்செய்கை 100 வீதம் அழிவடைந்துள்ளது.
மேற்கண்டவாறு வடமாகாண விவசாய அமைச்சு தகவல்கள் சுட்டிக்காட்டியுள்ளன. அமைச்சின் தகவல்களில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார், முல்லைத்தீவு, வவுனியா ஆகிய வடமாகாணத்தின் 5 மாவட்டங்களிலும் 28 ஆயிரத்து 802.5 ஏக்கர் நிலத்தில் செய்யப்பட்ட நெற்செய்கை 100 வீதம் அழிவடைந்துள்ளதுடன், 22 ஆயிரத்து 875 ஏக்கர் நிலத்தில் செய்யப்பட்ட நெற்செய்கை 75 வீதம் அழிவடைந்துள்ளது.
32 ஆயிரத்து 302.5 ஏக்கர் நிலத்தில் செய்யப்பட்ட நெற்செய்கை 50 வீதம் அழிவடைந்துள்ளதுடன், 10 ஆயிரத்து 65 ஏக்கர் நிலத்தில் செய்யப்பட்ட நெற்செய்கை 25 வீதம் அழிவடைந்துள்ளது.
மேலும் வடக்கின் 5 மாவட்டங்களிலும் மேற்படி அழிவுகளினால் 33 ஆயிரத்து 184 விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் உப உணவு பயிர் செய்கையிலும் பாரிய அழிவு உண்டாகியுள்ளது. இதன்படி 5 மாவட்டங்களிலும் சுமார் 1488.75 ஏக்கர் நிலத்தில் செய்யப்பட்ட உப உ ணவு பயிர்செய்கைகள் அழிவடைந்துள்ளன.