யாழ்ப்பாணத்திலிருந்து சென்ற பேருந்து மோதி 15 மாடுகள் பலி!

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்புநோக்கிச் சென்ற பேருந்து மாடுகளை மோதித்தள்ளி கோர விபத்துக்குள்ளாகியுள்ளது.

இச்சம்பவத்தில் 15 மாடுகள் அந்த இடத்திலேயே பலியாகியுள்ளதுடன், 25இற்கும் மேற்பட்ட மாடுகள் படுகாயமடைந்துள்ளன.

இதனால் பேருந்துக்குள் இருந்த பயணிகள் சிறுகாயங்களுக்குள்ளாகியுள்ளதாக பேருந்தில் பயணித்த பயணியொருவர் தெரிவித்துள்ளார்.

இச்சம்பவத்தின்போது பேருந்துச் சாரதி போதையில் இருந்ததாகவும் பயணிகள் விசனம் தெரிவித்துள்ளனர்.

Related Posts