இலங்கை தனியார் மருத்துவ கல்லூரிக்கு எதிராக யாழில் இன்று பாரிய எதிர்ப்பு பேரணி

மாலபே தனியார் மருத்துவ கல்லூரிக்கு எதிர்ப்பு தெரிவித்து யாழ்.பல்கலைகழக மருத்துவ பீட மாணவர்கள் தொடர்ந்து எதிர்ப்பு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்ற நிலையில் இன்றும் (வெள்ளிக்கிழமை) பாரிய எதிர்ப்பு பேரணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

பல்கலைக்கழக வளாகத்திலிருந்து இன்றைய எதிர்ப்பு பேரணியை மாணவர்கள் ஆரம்பித்துள்ளனர். அவர்கள் பல்கலை வளாகத்திலிருந்து பலாலி வீதி வரை சென்று அங்கிருந்து வைத்தியசாலை வீதியூடாக மாவட்ட செயலகத்தை சென்றடையவுள்ளனர்.

அங்கு தமது கோரிக்கைகளை உள்ளடக்கிய மகஜரினை மாவட்ட அரசாங்க அதிபரிடம் கையளிக்க உள்ளனர். இதன் பிரதிகள் வடமாகாண முதலமைச்சர் மற்றும் ஆளுநர் ஆகியோருக்கும் அனுப்பி வைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts