கடத்தப்பட்டு காணாமல் போன மற்றும் ராணுவத்திடம் சரணடைந்த நிலையில் காணாமல் போன உறவுகள் தொடர்பான உண்மைத் தன்மையை அரசாங்கம் பகிரங்கப்படுத்த வேண்டுமென வலியுறுத்தி வவுனியாவில் முன்னெடுக்கப்பட்டுவரும் சாகும் வரையிலான உண்ணாவிரத போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து, திருகோணமலையில் அடையாள உண்ணாவிரத போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்திற்கு முன்பாக இன்று (திங்கட்கிழமை) நண்பகல் முதல் குறித்த அடையாள உண்ணாவிரத போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருவதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
இப் போராட்டத்தில், காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் மற்றும் அவர்கள் சார்ந்து செயற்படும் அமைப்புகளைச் சேர்ந்த பலர் கலந்துகொண்டுள்ளனர்.
காணாமல் போன தமது உறவுகள் உயிருடன் இருக்கின்றார்களா இல்லையா என்பது குறித்து எவ்வித தகவலும் தெரியாமல் காலம் கழித்து வரும் தமக்கு, இனியும் காலம் கடத்தாமல் அரசாங்கம் உண்மையை வெளிப்படுத்த வேண்டுமென உறவுகளை தொலைத்தவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தொடர்புடைய செய்தி
காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின் உண்ணாவிரத போராட்டம் ஆரம்பம்