உணவு நஞ்சானதால் 15 பேர் வைத்தியசாலையில்

பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது உற்கொண்ட உணவு நஞ்சானதால், 12 வயதுக்குட்பட்ட 5 சிறுவர்கள் உட்பட 15 பேர் , பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என கரவெட்டி சுகாதார வைத்திய அதிகாரி சி.சுதோகுமார் தெரிவித்தார்.

உப்புகிணற்றடி கரணவாய் வடக்கு பகுதியில் உள்ள வீடொன்றில் நேற்று இரவு பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது சமைக்கப்பட்ட உணவே இவ்வாறு விசமாகியுள்ளது.

வல்வெட்டித்துறை பகுதியில் உள்ள இறைச்சிக்கடையொன்றில் இறைச்சியைப்பெற்று வீட்டில் சமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனையடுத்து, கரவெட்டி சுகாதார வைத்திய அதிகாரி தலமையிலான குழுவினர் வீட்டை பரிசோதனையை மேற்கொண்டனர்.

இதன்போது சமைக்கப்பட்ட இறைச்சியே இவ்வாறு விசமாகி பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது என கரவெட்டி சுகாதார வைத்திய அதிகாரி தெரிவித்தார்.

Related Posts