காங்கேசன்துறையில் கைவிடபட்ட நிலையிலிருந்த ரயில் பெட்டிகள் அகற்றப்பட்டன

கைவிடப்பட்ட நிலையில் காங்கேசன்துறை ரயில் நிலையத்தில் காணப்பட்ட ஒரு தொகை ரயில் பெட்டிகள் ரயில்வே திணைக்களத்தினால் நேற்று (செவ்வாய்க்கிழமை) அகற்றப்பட்டுள்ளன.

யுத்தம் காரணமாக யாழ்.குடாநாட்டில் இருந்த ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டன. இந்த நிலையில் காங்கேசன்துறை ரயில் நிலையத்தில் கைவிடப்பட்ட நிலையில் ஒரு தொகை ரயில் பெட்டிகள் காணப்பட்டுள்ளன.

குறித்த பகுதியில் தற்சமயம் மீள் குடியேற்ற நடவடிக்கைகள் மேற் கொள்ளபட்டு வருவதுடன் ரயில் நிலையத்திற்கு வரும் குறுக்கு வீதிகளும் இதனால் மூடப்பட்டு இருந்தன.

இதனை கருத்தில் கொண்டு ரயில்வே திணைக்களத்தினால் குறித்த பழைய ரயில் பெட்டிகள் அகற்றப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

யுத்தம் முடிந்த பின்னர் கடந்த மஹிந்த ஆட்சியின் போது, மீண்டும் வடக்கிற்கான ரயில் சேவை ஆரம்பிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Posts