லொத்தர் சீட்டுக்களின் விலை அதிகரிப்பு!

பொதுமக்களுக்கு கூடுதலான நன்மைகளை வழங்கும் பொருட்டு நேற்றைய தினத்திலிருந்து லொத்தர் சீட்டுக்களின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் லொத்தர் சீட்டுக்களின் விலை தொடர்பாக இடம்பெற்ற ஊடவியலாளர்களுக்கு விளக்கமளிக்கும் நிகழ்விலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில், லொத்தர் சீட்டுக்களின் விலை அதிகரிப்புக்கு எதிராக பல்வேறு பிரதேசங்களில் எதிர்ப்பு போராட்டங்கள் இடம்பெற்று வருகின்றது.

இவ்வாறு போராட்டம் நடாத்தும் லொத்தர் சீட்டு முகவர்கள் இதுவரை தம்முடன் பேச்சுவார்த்தைக்கு வரவில்லை. எனவே இந்தப் போராட்டத்திற்குப் பின்னணியில் அரசியல் சக்திகள் செயற்படலாம் எனச் சந்தேகம் எழுந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

அத்துடன் லொத்தர் சீட்டு விற்பனையிலிருந்து யாராவது விலகிக்கொண்டால், அவருக்குப் பதிலாக வேலைசெய்வதற்குப் பலர் காத்திருக்கின்றனர் எனவும் தெரிவித்துள்ளார்.

லொத்தர் சீட்டு விற்பனையில் கிடைக்கும் கொடுப்பனவுகளை அதிகரிக்க வேண்டும் என போராட்டம் நடத்தும் விற்பனையாளர்கள் மற்றும் முகவர்களின் நடவடிக்கைகளை எந்த விதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

Related Posts