ஒற்றையாட்சி தொடர்ந்தால் நாடு பிளவுபடும்; மாவை.எம்.பி எச்சரிக்கை

அம்பாறை மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவாளர்களுனான சந்திப்பு ஆலையடிவேம்பு பிரதேசசெயலக கலாசார மண்டபத்தில் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடிஸ்வரன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்ட இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மாவை.சோ.சேனாதிராஜா,

ஆட்சியில் இருக்கின்ற அரசாங்கம் தமிழ்மக்களையும் ஐ.நா.தீர்மானத்தினையும் ஏமாற்றினால் தென்னிலங்கையில் ஆட்சியினை நடாத்தாது தடுக்கும் போராட்டத்தினை தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு நடாத்துவதற்கு தமிழ்மக்கள் ஒத்துழைப்பு வழங்கவேண்டும் நீங்கள் அதனை வழங்குவீர்கள் என்ற நம்பிக்கை உண்டு.

தமிழ்மக்கள் உரிமைக்காக போராடிய ஆயுதப்போராட்டம் மௌனித்த பின்னர் ராஜபக்ஷ அரசாங்கம் தமிழ்மக்களுக்கு எதிராக இராணுவ அடக்குமுறைகள் ஊழல் நிறைந்த ஆட்சியினை செய்து கொண்ட மகிந்த அரசாங்கத்தை அகிம்சை வழியில் வாக்குப்பலத்தால் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வேண்டுகோளை ஏற்று ஆட்சியனை மாற்றம்செய்தவர்கள் தமிழ்மக்கள் என்பதனை யாரும் மறந்துவிடமுடியாது.

தமிழ்தேசியக் கூட்டமைப்பினர் இன்று எமது உரிமையினை பெற்றுக்கொள்வதற்காக கச்சிதமாக செயற்பட்டுக்கொண்டு இருக்கின்றோம் கடந்த காலங்களில் தமிழ்மக்களின் உரிமைக்காக குரல்கொடுத்த நான் 11 தடவை கைதுசெய்யப்பட்டேன் 7 வருடம் சிறைப்படுத்தப்பட்டேன் இரணுவத்தினரால் தாக்கப்பட்டு தூக்கிவீசப்பட்டேன் இச்சம்பவங்கள் இன்னும் மானங்களைவிட்டு மாறவில்லை இவ்வாறான நிலையில் தமிழ்மக்களுக்கான அரசியல் தீர்வை எதிர்பார்த்தவர்களாக இருக்கின்றோம்.

இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிநேசன் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைரெட்ணசிங்கம் கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கீ.துரைராஜசிங்கம் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் த.கலையரசன் ஆகியோரும் கலந்து கொண்டனர்

Related Posts