ரவிராஜ் வழக்கு விவகாரம் : மேன்முறையீடு செய்ய முடிவு

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் கொலை வழக்குத் தொடர்பில் வழங்கப்பட்ட தீர்ப்புக்கு எதிராக மேன்முறையீடு செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்டவர்களின் தரப்பு வழக்கறிஞர் என்ற வகையில் தான் இந்த மேன்முறையீட்டை மேற்கொள்ளவுள்ளதாக, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் குறிப்பிட்டுள்ளார்.

நடராஜா ரவிராஜ் கொலை வழக்கு தொடர்பான தீர்ப்பு கடந்த வௌ்ளிக்கிழமை கொழும்பு மேல் நீதிமன்றத்தால் வழங்கப்பட்டது.

விஷேட ஜூரி சபை முன் நடந்த இந்த வழக்கு விசாரணைகளில், குற்றம்சாட்டப்பட்ட ஐவரும் விடுதலை செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts