காரைநகர் கடலில் 17 இந்திய மீனவர்கள் கைது

காரைநகர் கடல்பிரதேசத்தில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் 17 பேரை, 3 விசைப்படகுடன் காங்கேசன்துறைக் கடற்படையினர் புதன்கிழமை (21) இரவு கைதுசெய்துள்ளதாக, கடற்படை ஊடகப் பேச்சாளர் கப்டன் அக்ரம் அலவி தெரிவித்தார்.

கைதான மீனவர்கள் அனைவரும் புதுக்கோட்டை மற்றும் ஜெகதாப்பட்டினம் பகுதியினைச் சேர்ந்தவர்கள் எனவும் அவர் தெரிவித்தார்.

கைதான மீனவர்கள் விசாரணையின் பின் கடற்றொழில் நீரியல்வளத்துறை மாவட்ட அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

Related Posts