கிளிநொச்சி மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள காணிப்பிணக்குகளைத் தீர்த்துவைப்பதற்கு நேற்று வடக்கு மாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரே தலைமையில் விசாரணையொன்று நடைபெற்றது.
இந்த விசாரணையில் 125 காணிப்பிணக்குகள் வடக்கு மாகாண ஆளுநரால் தீர்த்துவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், இதன்போது வடமாகாண ஆளுனர், ஆளுனர் செயலாளர், கிளிநொச்சி மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர், வடமாகாண காணி ஆணையாளர், பிரதேச செயலாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இந்தக் கலந்துரையாடலின் பின்னர் கிளிநொச்சி பொதுச்சந்தை வர்த்தகர்களைச் சந்தித்த வடக்கு மாகாண ஆளுனர், எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் பாதிக்கப்பட்ட வர்த்தகர்களுக்கு இழப்பீடு வழங்கப்படும் எனவும் உறுதியளித்தார். அத்துடன் கிளிநொச்சி மாவட்டத்துக்கு ஒரு தீயணைப்பு வண்டியும் வழங்கப்படவுள்ளதாகவும், விரைவாக சந்தைக் கட்டடம் ஒன்றை அமைத்துத் தருவதாகவும் உறுதியளித்தார்.