இலங்கை கடற்படையினரால் யாழ் போதனா வைத்தியசாலையில் அமைக்கப்பட்ட குடிநீர்சுத்திகரிக்கும் நிலையம் நேற்று திறந்து வைக்கப்பட்டது
யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் சத்தியமூர்த்தி விடுத்த வேண்டுகோளிற்கு அமைவாக இலங்கை கடற்படையினரினால் யாழ் போதனா வைத்திய சாலையில் அமைக்கப்பட்ட குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டது.இதனையே வடமாகாண கடற்படை தளபதிறியல் அட்மிரல் பியல் டி சில்வா நேற்று காலை உத்தியோகபூர்வமாக திறந்து வைத்தார்
சுத்தமான குடிநீரை அனைவரும் பெற்றுக்கொள்ளும் நோக்கில் கடற்படையினரால் முன்னெடுக்கப்பட்டுள்ள இத்திட்டத்தின் முதற்கட்டம் யாழ் பல்கலைக்கழகத்தில் ஜனாதிபதியினால் அண்மையில் ஆரம்பித்து வைக்கப்பட்டிருந்த நிலையில் இந்த குடிநீர் திட்டத்தின் இரண்டாம்கட்டம் தற்போது யாழ் போதனா வைத்தியசாலையில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது .
ஐம்பது லட்சம் பெறுமதியான இத்திட்டத்தை கடற்படையினர் பதினைந்து லட்சம் ரூபா பெறுமதியில் அமைத்துள்ளதுடன் நாட்டிலுள்ள அனைத்து கடற்படையினரும் தமது ஒருநாள் வேதனத்தை இத்திட்டத்திற்கு வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
