மரம் விழுந்து ஒருவர் உயிரிழப்பு

யாழ்ப்பாணத்தில் நிலவும் காற்றுடன் கூடிய மழை கால நிலை காரணமாக, வீதியோரத்தில் இருந்த மரம் முறிந்து விழுந்து, ஒருவர் உயிரிழந்துள்ளார்.

பூநகரி கட்டட திணைக்கள தொழிநுட்ப உத்தியோகத்தரான சச்சிதானந்தம் சயந்தன் (வயது 30) என்பவரே உயிரிழந்துள்ளார்.

சாவகச்சேரியை வதிவிடமாக கொண்ட இவர், வியாழக்கிழமை (01) காலை மோட்டார் சைக்கிளில் அலுவலகத்துக்கு பறப்பட்டுச் சென்றுள்ளார்.

இதன்போது சாவகச்சேரி பகுதியிலேயே வீதியோரமாக இருந்த மரம், புயல் காற்று காரணமாக சரிந்து விழுந்தபோது குறித்த நபர் அதனுள் அகப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

சடலம் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

Related Posts