இலங்கைக்கு எதிரான போர்க்குற்ற விசாரணைகள் வலுவிழக்காது:சுமந்திரன்

சர்வதேச அரங்கில் ஏற்பட்டுவரும் அரசியல் மாற்றம் இலங்கைக்கு எதிரான போர்க்குற்ற விசாரணைகளை வலுவிழக்கச் செய்யும் என்று அரசாங்கம் கருதினால் அது முற்றிலும் தவறானது என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

வெளிவிவகார அமைச்சிற்கான நிதி ஒதுக்கீடு தொடர்பான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இதனைத் தெரிவித்தார்.

இதன் போது அவர் மேலும் குறிப்பிடுகையில்,

“நாங்கள் ஒன்றுபட்ட இலங்கைக்குள் அதிகாரப் பகிர்வுடன் ஜக்கியப் பட்டு வாழவே விரும்புகின்றோம். அதற்கானஉறுதிமொழிகளைவழங்கியுள்ளோம். அதிகாரங்களை மத்திய, மாநிலங்கள், பிரதேச சபை என்ற ரீதியில் பகிர்ந்து கொள்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

போர்க் குற்றம் தொடர்பில் ஜ.நா மனித உரிமைகள் ஆணைக்குழு கொண்டு வந்த விசாரணைப் பொறிமுறைக்கு இலங்கை ஒத்துழைப்பு வழங்கியுள்ளது. இதனை முன்னெடுத்துச் செல்வதற்கு இலங்கை முயலவேண்டும்.

உலக அரசியல் அரங்கில் ஏற்பட்டுவரும் மாற்றங்களைக் கொண்டு பொறுப்புக் கூறலில் இருந்து தப்பிவிடலாம் என்று அரசாங்கம் கருதுமானால் அது தவறானது. அவ்வாறு நிகழப்போதும் இல்லை. இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தியே ஆக வேண்டும்” எனவும் அவர் குறிப்பிட்டார்.

Related Posts