உண்மையை கூறும் குழுமத்தின் அமர்வு யாழில்

இலங்கை சமாதான பேரவையின் அனுசரணையுடன் யுத்தத்தினால் நடளாவிய ரீதியில் பாதிப்புக்குள்ளானவர்கள் தொடர்பான கருத்துக்களை கேட்கும் உண்மையை கூறும் அமர்வொன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.

இனங்களுக்கிடையில் புரிந்துணர்வை ஏற்படுத்தும் நோக்கில் மாவட்ட ரீதியாக மேற்கொள்ளப்பட்டு வரும் இந்த அமர்வின், யாழ், மன்னார் மற்றும் புத்தளம் மாவட்டங்களுக்கான அமர்வு நேற்று யாழ் மாவட்டத்தில் இடம்பெற்றது.

ஓய்வு பெற்ற மேல் நீதிமன்ற நீதிபதி இ.வசந்தசேனன் தலைமையில் இடம்பெற்ற இன்றைய விசாரணை அமர்வில், யாழ் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ப.செந்தில் நந்தணன், யாழ் மாவட்ட சர்வமத பேரவையின் தலைவர் ஜெ.ஜெயக்குமார் உள்ளிட்ட உண்மையைகூறும் குழுவினர் பாதிக்கப்பட்டவர்களிடம் வாக்குமூலங்களை பதிவு செய்ததுடன் அவர்கள் எதிர்பார்க்கும் தீர்வுகள் குறித்தும் கேட்டறிந்தனர்.

Related Posts