மாவீரர் துயிலும் இல்லங்களை விடுவிக்குமாறு விஜயகலா மகேஸ்வரன் கோரிக்கை

வடக்கில் ஸ்ரீலங்கா இராணுவத்தினர் கட்டுப்பாட்டிலுள்ள மாவீர்ர் துயிலும் இல்லங்களை விடுவிக்குமாறு ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் சிறுவர் மற்றும் மகளீர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் உள்ள மாவீர்ர் துயிலும் இல்லங்களையே விடுவிக்குமாறு நாடாளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற 2017 ஆம் ஆண்டுக்கான காணி அமைச்சு தொடர்பான குழு நிலை விவாதத்தின் போது வலியுறுத்தியுள்ளார்.

அத்துடன் பெரும்பான்மையின மக்களுக்கு உள்ள அனைத்து உரிமைகளும் சிறுபான்மையின மக்களுக்கு உள்ளதாக தெரிவித்த அவர், சிறுபான்மை மக்கள் இனவாதத்தை தூண்டவில்லையெனவும் குறிப்பிட்டார்.

அதேவேளை, வலிகாமம் வடக்கில் 6ஆயிரம் ஏக்கர் காணி இராணுவத்தினர் வசம் காணப்படுவதாகவும், அவை இன்னும் விடுவிக்கப்படவில்லையெனவும் சுட்டிக்காட்டினார்.

வலிகாமம் வடக்கில் பல கோயில்கள் மூடப்பட்டுள்ளமையினால் மக்கள் வழிபாடுகளை மேற்கொள்ள முடியாத சூழல் காணப்படுவதாகவும் சிறுவர் மற்றும் மகளீர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் வலியுறுத்தியுள்ளார்.

Related Posts