காலை முதல் எங்களுக்கு தண்ணீர் கூட வழங்க வில்லை என வித்தியாவின் கொலை வழக்கின் 8 ஆவது சந்தேக நபர் குற்றம் சாட்டியுள்ளார்.
12 சந்தேக நபர்களின் வழக்கு நேற்று (செவ்வாய்க்கிழமை) ஊர்காவல்துறை நீதிமன்றில் விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்படது. இதன் போதே குறித்த 8ஆவது சந்தேக நபர் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
தங்களை வவுனியா சிறைச்சாலையில் இருந்து காலை 4 மணிக்கு அழைத்து வந்ததாகவும் சிறைச்சாலை அதிகாரிகள் இதுவரை தண்ணீர் கூட வழங்க வில்லை எனவும் தெரிவித்திருந்தார்.
இதனையடுத்து, இந்த விடயம் தொடர்பில் சிறைச்சாலைகள் ஆணையாளருக்கு அறிவிக்குமாறும் இதற்கு உரிய நடவடிக்கை எடுக்கும் படி நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.