சுகாதாரத் தொழிலாளர்களின் கடும் எதிர்ப்பையும் மீறி கலகம் தடுக்கும் காவல்துறையினரின் பாதுகாப்புடன் யாழ்ப்பாணத்தில் குப்பைகள் அகற்றப்பட்டுள்ளன.
யாழ்ப்பாண நகர சுகாதார ஊழியர்கள் கடந்த 9 நாட்களாக பணிப் புறக்கணிப்பில் ஈடுபட்டுவந்தனர். இந்நிலையில் யாழ். நகரமெங்கும் குப்பைகளால் நிறைந்திருந்தது.
இன்நிலையில் இன்று, யாழ்ப்பாண உள்ளூராட்சி உதவி ஆணையாளர் அலுவலகமானது தனியார் நிறுவனமொன்றின் ஊழியர்களைக் கொண்டு குப்பைகளை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுத்திருந்த நிலையில் அதனை பணிப் புறக்கணிப்பில் ஈடுபட்ட ஊழியர்கள் தடுத்து நிறுத்தியிருந்தனர்.
இதனையடுத்து, கலகமடக்கும் காவல்துறையினரின் உதவியுடன் யாழ்ப்பாண உள்ளூராட்சி உதவி ஆணையாளர் அலுவலகம் தனியார் நிறுவன ஊழியர்களைக்கொண்டு குப்பைகளை அகற்றியுள்ளது.
குறித்த இடத்தில் வட மாகாண முதலமைச்சரின் ஆலோசகர் மற்றும் வட மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் ஆகியோர் பிரசன்னமாகியிருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
