ஆவா குழுவிற்கு எதிராக கடும் நடவடிக்கை அவசியம் : சம்பந்தன்

யாழ்ப்பாணத்தில் செயற்படும் ஆவா கும்பல் உட்பட அனைத்து ஆயுதக் குழுக்களும் களையப்பட வேண்டும் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரான எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் வலியுறுத்தியுள்ளார்.

அதேவேளை ஆவா குழுவுடன் இராணுவத்திற்கு தொடர்பிருப்பதாக அனைத்துத் தரப்பினரும் சந்தேகம் வெளியிட்டுவருவதாகவும் குறிப்பிட்டுள்ள எதிர்கட்சித் தலைவர், இது தொடர்பிலும் விரிவான விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.

யாழ்ப்பாணத்திற்கு விஜயம்செய்த எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனிடம், யாழ்ப்பாணத்தில் அண்மைக்காலமாக தீவிரமடைந்துள்ள வாள்வெட்டு, கொலை, கொள்ளை உட்பட சமூக விரோத செயல்களுடன் தொடர்புடைய ஆவா குழு தொடர்பில் ஊடகவியலாளர்கள் கேட்டபோதே அவர் இவ்வாறு பதிலளித்துள்ளார்.

Related Posts