72 கிலோ கஞ்சா மீட்பு

கிளிநொச்சி, சுண்டிக்குளம் பகுதியில் பற்றைக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த 72 கிலோ கிராம் கேரளா கஞ்சாவை இன்றுத் திங்கட்கிழமை (07) காலை மீட்கப்பட்டுள்ளதாக தர்மபுரம் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்தச் சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் எவரும் கைது செய்யப்படவில்லை என்றும் தெரிவித்த பொலிஸார், இந்த கஞ்சாவை பதுக்கி வைத்திருந்தவர்கள் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் தெரிவித்தனர்.

Related Posts