அமைச்சரவைப் பேச்சாளர் ராஜித சேனாரத்ன பொறுப்புடன் கருத்துத் தெரிவிக்க வேண்டும் என வட மாகாண முதலமைச்சர் ரெஜினோல்ட் குரே தெரிவித்தார்.
வடக்கில் செயற்படும் ஆவா குழு முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவினால் ஏற்படுத்தப்பட்ட ஒன்று என அமைச்சர் ராஜித சேனாரத்ன கடந்த ஒருசில தினங்களுக்கு முன்னர் கூறியிருந்தார். இது குறித்து ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே இவ்வாறு கூறினார்.
தெற்கில் இடம்பெறும் பிரச்சினைகளை விடவும் வடக்கில் இடம்பெறும் பிரச்சினைகளை வித்தியாசமாக பார்க்க வேண்டியுள்ளது எனவும் வடக்கு ஆளுனர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.