யாழ்ப்பாணம், புகையிரத நிலைய வீதியில் அமைந்திருக்கும் வீரகேசரி பத்திரிகையின் அலுவலகம் மீது, இன்று திங்கட்கிழமை (31) காலை போத்தல் வீச்சுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இது தொடர்பில் நிர்வாகத்தால் யாழ்ப்பாணப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
அங்கு பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி கமெராவின் பதிவின் அடிப்படையில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.