சுன்னாகத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது!

சுன்னாகம் பகுதியில் பொலிஸ் அதிகாரிகள் இருவர் தாக்கப்பட்ட சம்பவத்தின் பின்னர், அங்கு பாதுகாப்பை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி குறித்த பகுதியில் பொலிஸ் விஷேட அதிரடிப் படையினர் பாதுகாப்புக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

சுன்னாகம் நகரில் வர்த்தக நிலையம் ஒன்றில் கப்பம் பெறச் சென்ற குழுவொன்று மற்றும் ஆயுதம் இன்றி சிவில் உடையில் இருந்த மூன்று பொலிஸாருக்கும் இடையில் இந்த மோதல் ஏற்பட்டுள்ளது.

இந்தத் தாக்குதலில் காயமடைந்த பொலிஸ் அதிகாரிகள் சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களின் நிலைமை கவலைக்கிடமாக இல்லை என வைத்தியசாலை தகவல்கள் தெரிவித்துள்ளதாக, அரசாங்க தகவல் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

மேலும் இவர்கள் தற்போது யாழ் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதேவேளை, இது குறித்து விசாரணைகளை மேற்கொள்ள விஷேட பொலிஸ் குழுக்கள் சில அனுப்பப்பட்டுள்ளன.

அத்துடன், இந்த விடயம் தொடர்பில் சிலரிடம் வாக்குமூலம் பதிவுசெய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.

Related Posts