இந்திய அமைதிப்படையால் சுட்டுக்கொலை செய்யப்பட்ட வைத்தியசாலை ஊழியர்களுக்கு அஞ்சலி!

இந்திய அமைதிப்படையால் சுட்டுக்கொலை செய்யப்பட்ட 21 வைத்தியசாலை பணியாளர்களின் 29ஆவது நினைவுதினம், இன்று (வெள்ளிக்கிழமை) அனுஷ்டிக்கப்பட்டது. குறித்த 21 பேரும் கடந்த 1987ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் இன்றைய தினத்தில் ஈவிரக்கமின்றி சுட்டுக்கொல்லப்பட்டிருந்தனர்.

hospital-staff

யாழ். போதனா வைத்தியசாலை வளாகத்துக்குள் நுழைந்த இந்திய அமைதி காக்கும் படையினர், வைத்தியர்கள், தாதியர்கள், உத்தியோகத்தர்கள் மற்றும் நோயாளிகள் அடங்கலாக 68 பேரைச் சுட்டுக்கொலை செய்தனர். அவ்வாறு மனிதாபிமானமற்ற முறையில் சுட்டுக்கொல்லப்பட்ட, மனிதநேய செயற்பாட்டாளர்களான வைத்தியசாலை ஊழியர்கள் இன்றைய தினம் நினைவு கூரப்பட்டனர்.

யாழ்.போதனா வைத்தியசாலை பிரதிப்பணிப்பாளர் செ.பவானந்தராஜா உயிரிழந்த உத்தியோத்தர்களின் உருவப்படத்திற்கு மலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.

அதனை தொடர்ந்து சுட்டுக்கொல்லப்பட்ட உத்தியோகத்தர்களின் உறவினர்கள் சுடரேற்றியும், மலர் மாலை அணிவித்தும் மலர் தூவியும் தமது அஞ்சலிகளை செலுத்தினர்.

குறித்த அஞ்சலி நிகழ்வில், யாழ்.போதனா வைத்தியசாலையின் மேலதிக பணிப்பாளர் மற்றும் நிர்வாக உத்தியோகத்தர்கள், தாதியர்கள் உட்பட கொல்லப்பட்ட வைத்தியர்கள் மற்றும் தாதியர்களின் உறவினர்கள் எனப்பலரும் கலந்துகொண்டனர்.

19872

Related Posts