விபத்தில் குடும்பஸ்தர் பலி

கைதடிச் சந்திப் பகுதியில் புதன்கிழமை (19) இரவு இலங்கை போக்குவரத்துச் சபை பஸ் மற்றும் மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதியதில் குடும்பஸ்தர் ஒருவர் பலியாகியதாக சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்தனர்.

தச்சன்தோப்பு பகுதியைச் சேர்ந்த 2 பிள்ளைகளின் தந்தையாபன சகாதேவன் ஜோகன் (வயது 36) என்பவர் உயிரிழந்தார்.

யாழ்ப்பாணத்திலிருந்து கொடிகாமம் சென்ற பஸ்ஸுடன், சாவகச்சேரியிலிருந்து கைதடி நோக்கிச் சென்ற மோட்டார் சைக்கிள் மோதியது.

மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related Posts