தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரை சந்தித்தார் ஐ.நா. விசேட அறிக்கையாளர்

சிறுபான்மை மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து ஆராயும் நோக்கில் இலங்கை வந்துள்ள ஐ.நா.வின் சிறுபான்மை விவகாரங்களுக்கான விசேட அறிக்கையாளர் ரீட்டா இஷாக் நாடியா, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

un-special-reporter-met-tna

நாடாளுமன்ற கட்டிட தொகுதியில், இன்று (புதன்கிழமை) இச் சந்திப்பு இடம்பெற்றதாக கூட்டமைப்பின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இச் சந்திப்பில் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன், கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.

Related Posts