நாடு முழுவதிலும் பொலிஸ் பிரிவுகளை தயார் நிலையில் இருக்குமாறு அவசர உத்தரவு

உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் நாடு முழுவதிலும் உள்ள சகல பொலிஸ் பிரிவுகளையும் இன்று மாலை 6 மணி முதல் தயார் நிலையில் இருக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளதாக சிங்கள இணைய ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது.

இது குறித்து நாடு முழுவதிலும் உள்ள சகல பொலிஸ் நிலையங்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதுடன் விடுமுறையில் சென்ற பொலிஸ் அதிகாரிகள் உடனடியாக பணிக்கு திரும்புமாறு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.

எந்தவொரு அவசரமான நிலைமையாக இருந்தாலும் அதனை எதிர்கொள்ள தயராக இருக்கும் வகையில் ஜனாதிபதியால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அரசாங்கத்திற்குள் காணப்படும் அரசியல் போராட்டமே இதற்கு காரணம் எனவும் கூறப்படுகிறது.எவ்வாறாயினும் ஜனாதிபதியின் இந்த உத்தரவு தொடர்பாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு எந்த அறிக்கைகளையும் வெளியிடவில்லை..

மேல் மாகாண பொலிஸ் நிலையங்களுக்கு அவசர எச்சரிக்கை!! காரணம் என்ன..?

மேல் மாகாணத்திலுள்ள அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் இன்று இரவு எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

மேல் மாகாணத்துக்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் நந்தன முனசிங்கவே இவ்வாறு அறிவுறுத்தல் வழங்கியுள்ளதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஏதேனும், அவசர நிலைமை ஏற்படும் பட்சத்தல் அதற்கு முகம்கொடுக்கும் நோக்கில் இவ்வாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்படி, இன்று பகல் சேவையில் ஈடுபட்ட அனைத்து பொலிஸாரும் இரவு நேர கடமையில் ஈடுபட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளதாக அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, அண்மைய நாட்களில் கொழும்பு உள்ளிட்ட நாட்டின் அனைத்து பகுதிகளிலும் குற்றச் செயல்கள் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் கொழும்பு அரசியலிலும் அண்மைய நாட்களில் பரபரப்பு ஏற்பட்டுள்ள நிலையில் மேல் மாகாண பொலிஸ் நிலையங்களுக்கு இவ்வாறு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

Related Posts