Trail நடை பவனி: இன்று யாழில் இருந்து ஆரம்பம்

காலி ஹராபிட்டிய பகுதியில் புற்றுநோயினால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கான சிகிச்சை பிரிவு ஒன்றை அமைப்பதற்கான நடைபவனி இன்று (வியாழக்கிழமை) காலை யாழ்ப்பாணம் பருத்திதுறையில் ஆரம்பிக்கப்படவுள்ளது.

trail

இந்த நடைபவனியை ஆரம்பித்து வைப்பதற்காக இலங்கையின் பிரபல கிரிக்கெட் வீரர்களான குமார் சங்ககார, மகேல ஜேயவர்த்தன மற்றும் பொலிவூட் நட்சத்திரம் ஜாக்குலன் பெர்னாண்டஸ், பொப் பாடகர்களான பாத்தியா, சந்தூஷ், தொழில் முயட்சியாளர் ஒட்டாராடி ஆகியோரும் இணைந்து கொண்டுள்ளனர்.

சுமார் ஐந்து மில்லியன் நிதியினை திரட்டும் நோக்கில் வடக்கில் இருந்து தெற்கிற்கு 28 தினங்கள் இந்த நடை பவனி இடம்பெறவுள்ளது.
ஒரு நாளில் சுமார் 20 தொடக்கம் 30 கிலோமீற்றர் தூரத்தை கடக்கவுள்ளது.

 மேலும் இந் நடைபவனியானது யாழ்ப்பாணம்- பருத்தித்துறையில் ஆரம்பமாகி கொடிகாமம், மாங்குளம், மதவாச்சி, கல்முனை, குருணாகல், கொச்சிக்கடை, கொழும்பு, பாணாந்துறை மற்றும் சீனிகம போன்ற நகரங்கள் ஊடாக பயணிக்கவுள்ளது.

இந்நடைபவனியில் 2 ஆயிரம் வரையான நன்கொடையாளர்களும் 800 வரையான நடைபவனியாளர்களும் பதிவுகளை மேற்கொண்டுள்ளனர்.

2015 ஆம் ஆண்டில் ஹராபிட்டிய போதனா வைத்தியசாலையில் அதிகளவிலான புற்றுநோய் மரணங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இதேபோல் ஹராபிட்டிய பகுதியை சூழவுள்ள மாகாணங்களை சேர்ந்த மக்களுமாக சுமார் 6 மில்லியன் மக்களுக்கு இந்த வைத்தியசாலை சேவையாற்றி வருகிறது.

எனவே வலுவுள்ளவர்கள் நடைபவனியில் கலந்து கொள்ளுமாறு ட்ரெயில் அமைப்பும், கிரிக்கெட் வீரர்களும் நேற்றைய தினம் மாலை தெல்லிப்பளை புற்றுநோய் வைத்தியசாலையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Posts