தமிழ் மக்களை எவரும் பிழையாக வழிநடாத்தக்கூடாது!

தமிழ் மக்கள் பல்வேறு பிரச்சனைகளையும் நெருக்கடிகளையும் சந்தித்து வரும் நிலையில், நிரந்தர அரசியல் தீர்வொன்றைப் பெற்றுக்கொள்ளும் வகையில் செயற்படவேண்டும். இந்நிலையில் சிங்கள இனவாதிகளுக்கு தீனிபோடும் வகையில் செயற்படக்கூடாது எனவும் எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில்,

தமது உரிமைகளைப் பெறும் பொருட்டு தமது உணர்வுகளை வெளிப்படுத்தும் உரிமை தமிழ் மக்களுக்கு உண்டென்பதோடு, ஆட்சிமாற்றத்தின் பின்னர் ஏற்பட்டுள்ள பாரிய மாற்றங்கள் தொடர்பாகவும் தமிழ் மக்கள் கவனத்தில் கொள்ளல் வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

நாட்டில் புரையோடிப்போயுள்ள இனப்பிரச்சனை தீர்க்கப்பட்டு, நிரந்தர அரசியல் தீர்வைக் காணும் விடயத்தில் தீவிரமாகச் செயற்பட்டு வருவதாகத் தெரிவித்த சம்பந்தன், இச்சந்தர்ப்பத்தில் தமிழ் மக்களை யாரும் பிழையாக வழிநடாத்தக்கூடாது எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும், நாட்டில் காணப்படும் பெரும்பாலான பிரச்சனைகளுக்கு அரசியல் தீர்வு காணப்படாமையே காரணம் எனவும் தெரிவித்த அவர் அரசியல் தீர்வைப் பெறும் நடவடிக்கையை எவரும் குழப்பக்கூடாது எனவும் தெரிவித்தார்.

Related Posts