சகோதரர் உட்பட மூவர் மீது வாள்வெட்டு

யாழ்ப்பாணம் ஸ்ரான்லி வீதியில் வெள்ளிக்கிழமை (30) இரவு சகோதரர் உட்பட மூவர் மீது கும்பலொன்று மேற்கொண்ட வாள்வெட்டில், மூவரும் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணப் பொலிஸார் தெரிவித்தனர்.

இராசாவின் தோட்டப் பகுதியைச் சேர்ந்த சகோதரர் இருவர் உட்பட மூவரும் படுகாயமடைந்துள்ளார்.

ஸ்ரான்லி வீதியில் உள்ள கடையொன்றின் முன்னால் நின்று உரையாடிக்கொண்டிருந்த சமயம் மோட்டார் 3 சைக்கிளில் வந்த குழு இவர்கள் மீது தாக்குதல் மேற்கொண்டுவிட்டுத் தப்பிச் சென்றுள்ளது.

மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாணம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related Posts