புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளிகள் விடுவிப்பு

வவுனியா பூந்தோட்டம் புனர்வாழ்வு நிலையத்தில் புனவர்வாழ்வளிக்கப்பட்ட தமிழீழ விடுதலைப்புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள் நால்வர், இன்று (வியாழக்கிழமை) விடுவிக்கப்பட்டுள்ளனர்.

capture

பூந்தோட்டம் புனர்வாழ்வு நிலையத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில் புனர்வாழ்வு நிலையத்தின் பணிப்பாளர் கேணல் எம்.ஏ.ஆர்.கெமிடோன் பிரதம அதிதியாக கலந்துகொண்டு, முன்னாள் போராளிகளை குடும்பத்துடன் இணைத்து வைத்தார்.

இதன்போது, புனர்வாழ்வு நிலையத்தினை சேர்ந்த பயிலுனர்கள் மற்றும் அந்நிலையத்தில் பணியாற்றும் இராணுவ வீரர்களின் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றிருந்தன.

இறுதி யுத்தத்தின் பின்னர் சுமார் 12 ஆயிரம் பேர் இலங்கை இராணுவத்தினரிடம் சரணடைந்த நிலையில், அவர்கள் புனர்வாழ்விற்கு உட்படுத்தப்பட்டு படிப்படியாக விடுதலைச் செய்யப்பட்டனர்.

இறுதியாக 19 பேர் புனவர்வாழ்வளிக்கப்பட்டு வந்த நிலையில் அவர்களில் நால்வர் சமூகத்துடன் இணைக்கப்பட்டுள்ள நிலையில், தொடர்ந்தும் 15 பேருக்கு புனர்வாழ்வு வழங்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related Posts